சமூக ஊடகத்தில் மலேசிய மாமன்னரை அவமதித்ததாகப் புகார்

சமூக ஊடகத்தில் மலேசிய மாமன்னரை அவமதித்ததாகப் புகார்

1 mins read
8fb3d5bb-9bf7-4ddf-9c39-cdfa882b0944
படம். - தமிழ் முரசு

ஜோகூர் பாரு: சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு தகவல் மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிமை அவமதிப்பதாக உள்ளது என ஜோகூர் மாநிலத்தில் குறைந்தது இரண்டு அம்னோ இளையர் பிரிவுகள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய ஜோகூர் மாநில அம்னோ இளையர் பிரிவுத் தலைவர் நூர் அஸ்லீன் அம்புரோஸ், மாநிலத்தின் இளையர் பிரிவைச் சேர்ந்த 26 கிளைகளும் சமூக ஊடக பதிவேற்றத்துக்கு எதிராக புகார் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“இதுவரை, பாரிட் சுலோங், பாசிர் கூடாங் ஆகிய பிரிவுகள் புகார் அளித்துள்ளன. பாகோ பிரிவு இன்று (ஞாயிறன்று) புகார் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற பிரிவுகள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாள்களில் புகார் அளிக்கவுள்ளன,” என்று திரு நூர் அஸ்லீன் அம்புரோஸ் கூறினார்.

இந்நிலையில், பாசிர் கூடாங் அம்னோ பிரிவுத் தலைவர் மட்யாசிர் அகமது பசிர் ஸ்ரீ அலாம் காவல்துறை தலைமையகத்தில் ஞாயிறு காலை (ஏப்ரல் 14) அன்று புகார் அளித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

“அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்காக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்டதற்கு காரணம் இந்தப் பிரச்சினை நீண்டுகொண்டே போகவேண்டாம் என்பதற்காக,” என்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

குறிப்புச் சொற்கள்