பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் 38 வயது ஹஃபிசுல் ஹராவி கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசியக் காவல்துறையின் தலைமை ஆய்வாளர் ரஸாருதீன் உசேன் ஏப்ரல் 15ஆம் தேதியன்று அறிவித்தார்.
ஹஃபிசுல் கிளந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் பிற்பகல் 3 மணி அளவில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் சில தகவல்கள் வெளியாயின.
ஹஃபிசுல் தனியாக இருந்ததாகவும் அவர் கைதுசெய்யப்படுவதற்கு முன்பு போராட்டம் இருந்ததாகவும் மலேசியாவின் சினார் ஹரியான் ஊடகத்துக்கு ஒருவர் தகவல் அளித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 16) கிளந்தான் காவல்துறைத் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டம் நடைபெறும்.