தங்க விலையை உயர்த்திய ஈரான் தாக்குதல்

1 mins read
19fa8884-0ed2-43a6-aa66-104ffd88b77c
ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை ஏப்ரல் 12ஆம் தேதி முதல்மறை US$2.400ஐ கடந்தது. - கோப்புப் படம்: சாவ் பாவ்

மெல்பர்ன்: இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தங்கத்திற்கான தேவை வாரயிறுதியில் அதிகரித்தது.

அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ஏப்ரல் 15) வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை விண்ணை முட்டியது.

காலை 8.51 மணிக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 0.4 விழுக்காடு அதிகரித்து US$2,354.62 ஆனது.

மத்திய கிழக்கு வட்டாரப் பூசல் புதிய அபாயகட்டத்திற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை 0.6 விழுக்காடு உயர்ந்தது.

இஸ்ரேல் மீது ஈரான் 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைப் பாய்ச்சியது. அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவித்தன.

அபாயகரமான பூசல் தங்கத்தின் தேவையை அதிகரித்துவிட்டது.

ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை ஏப்ரல் 12ஆம் தேதி முதல்முறையாக US$2,400ஐ கடந்தது.

அன்றைய தினம் S$2,431.29 என்ற விலையில் தங்கம் விற்பனை ஆனது.

ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம் என்ற அச்சம் பாதுகாப்பு மீது கவனத்தைத் திருப்பியது. அதன் காரணமாக தங்கத்தின் விலை கூடியது.

அதன் விலை மீண்டும் உயரக்கூடும் என்பதையே தொழில்நுட்பக் குறியீடுகள் உணர்த்துகின்றன.

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றமே தங்கத்தை வாங்க வேண்டியதன் அவசியத்திற்கான காரணமாக உள்ளது என்று பெப்பர்ஸ்டோன் குரூப் என்னும் நிறுவன ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் கிறிஸ் வெஸ்டன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்