மியன்மார் ராணுவம் மீது தாக்குல்: நால்வர் பலி, பலர் காயம்

மியன்மார் ராணுவம் மீது தாக்குல்: நால்வர் பலி, பலர் காயம்

1 mins read
c6d335f2-7979-4abe-89b5-761deddeb650
மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பல தாக்குதல்கள் நடத்தப்படுவதால் நாடெங்கும் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

யங்கூன்: மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்களை எதிர்த்து பல அமைப்புகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மக்கள் தற்காப்புப் படை எனும் போராளி அமைப்பு, மியன்மார் நேரப்படி ஏப்ரல் 14ஆம் தேதி மாலை பியின் ஓ லுவின் நகரை நோக்கி 11 ஏவுகணைகளைப் பாய்ச்சியது.

இதன் காரணமாக அந்நகரில் உள்ள மருத்துவமனை, பௌத்த துறவு மாடம், ஹோட்டல் ஆகியவை சேதமடைந்தன.

தாக்குதலில் நான்கு பேர் மாண்டனர்; 12 பேர் காயமடைந்தனர்.

மாண்டோரில் இருவர் பௌத்த துறவிகள்.

அவர்களில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிலையத்தில் இருந்த ராணுவ வீரர்களும் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்