தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏ.ஆர். ரகுமான்: டெய்லர் சுவிஃப்டுடன் இசையமைக்க ஆர்வம்

1 mins read
18c25150-9b56-4131-91f2-6e8f57be3e89
டெய்லர் சுவிஃப்ட் இசையமைப்பாளர்களுக்கு ஓர் உத்வேகம் அளிப்பதாக ஏ.ஆர் ரகுமான் கூறினார். - படம்: இணையம்

அமெரிக்க பாப் பாடகி டெய்லர் சுவிஃப்டுடன் இணைந்து பணியாற்றும் ஆர்வத்தை ஆஸ்கர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளிப்படுத்தியுள்ளார்.

’கனெக்ட் எஃப்எம் கனடா’க்கு அளித்த நேர்காணலில் அவர் அவ்வாறு கூறினார்.

“டெய்லர் சுவிஃப்டுக்கு எப்படி வேண்டுமோ, அவ்வாறே இசை அமைக்கலாம். அவர்தான் பாடல் எழுதப் போகிறார்,” என்றார் அவர்.

“இசையின் ஆற்றலை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தினால், அதுவே சிறப்பு. மைக்கல் ஜாக்சன் அதைத்தான் செய்தார். அவர் தொண்டுப் பணிகளுக்காக இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்,” என்று ஏ.ஆர். ரகுமான் கூறினார்.

“டெய்லர் சுவிஃப்ட், இசையமைப்பாளர்களுக்கு ஓர் உத்வேகம் அளிக்கிறார்,” என்றார் அவர்.

இந்நிலையில், டெய்லர் சுவிஃப்டின் ‘டார்ச்சர்ட் பொயட்ஸ் டிப்பார்ட்மெண்ட்’ பாடல் தொகுப்பு ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

குறிப்புச் சொற்கள்