அமெரிக்காவில் சாலையில் சர்க்கஸ் யானை (காணொளி)

அமெரிக்காவில் சாலையில் சர்க்கஸ் யானை (காணொளி)

1 mins read
42a5954e-cd4a-4428-b355-af59da14f93b
சம்பவம் பதிவான காணொளியில் இடம்பெறும் காட்சி. - காணொளிப் படம்: கேத்தரின் ஏ கோப்லண்ட் / ஏபிசி செய்தி நிறுவனம் / ஃபேஸ்புக்

பியூட்: அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் உள்ள பியூட் எனும் சிற்றூரில் யானை ஒன்று சாலையில் நடந்து சென்றது.

சர்க்கஸ் யானையான இது தப்பியோடி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தது. சாலையில் வாகனமோட்டிகள் யானையைக் கண்டு அதிர்ச்சிக்கயடைந்தனர்.

வியோலா என்று பெயரிடப்பட்ட இந்த யானை சாலைக்கு அருகே குளித்துவிடப்பட்டது. அப்போது கார் ஒன்றின் சத்தத்தைக் கேட்டு பயந்துபோன வியோலா தப்பித்துச் சென்றது.

வியோலா பல கார்களைத் தாண்டி நடந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. பிறகு வாகன நிறுத்துமிடம் ஒன்றை நோக்கிச் சென்றது. வியோலாவின் பயிற்சியாளர் அதனைத் துரத்திக்கொண்டுப் போனார்.

வியோலா சுமார் 10 நிமிடங்களுக்கு யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் சாலையில் சென்றதாக உள்ளூர் வர்த்தகர் ஒருவர் கூறினார் என்று பிபிசி ஊடகம் குறிப்பிட்டது. அதற்குப் பிறகு வியோலா மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 16) நிகழ்ந்தது.

குறிப்புச் சொற்கள்