உள்கட்டமைப்பு வசதிகளை இலக்காகக் கொண்ட ரஷ்ய ட்ரோன் தாக்குதல்

உள்கட்டமைப்பு வசதிகளை இலக்காகக் கொண்ட ரஷ்ய ட்ரோன் தாக்குதல்

1 mins read
27c0ec66-68c4-49df-8d8b-e435793227d9
ஏப்ரல் 11ஆம் தேதியன்று உக்ரேனின் உள்கட்டமைப்பு வசதிகள் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஓர் இடத்தில் பற்றி எரியும் தீயை தீயணைப்பாளர் ஒருவர் அணைக்க முயல்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

உக்ரேன்: உக்ரேனின் மேற்குப் பகுதியான இவானோ-பிராங்க்விஸ்க் நகரில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை இலக்காகக் கொண்டு ரஷ்யா, ட்ரோன் (ஆளில்லா வானூர்தி) தாக்குதலை நடத்தியுள்ளது என்று அதன் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உக்ரேனின் ஆகாயத் தற்காப்புப் படைகள் ரஷ்யாவின் அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாகவும் அத்தாக்குதலில் யாருக்கும் காயமில்லை என்றும் இவானோ-பிராங்க்விஸ்க் நகர ஆளுநர் ஸ்விட்லானா ஒனிஷ்சுக் டெலிகிராம் செயலியில் கூறினார்.

அவசரகால குழுக்கள் தொடர்ந்து அங்கு பணியாற்றி வருகின்றன என்று தெரிவித்த திருவாட்டி ஒனிஷ்சுக், முக்கியமான உள்கட்டமைப்பு சேதம் பற்றி தெரிவிக்கவில்லை.

அந்நகரில் வியாழக்கிழமை காலையில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக உக்ரேனின் ஊடகமான சஸ்பில்னே கூறியது ஒருபுறம் இருக்க, அந்தப் பகுதியில் ட்ரோன்கள் பறந்தன என்று உக்ரேனிய ஆகாயப்படை தெரிவித்தது.

உக்ரேனின் உள்கட்டமைப்பு வசதிகளை இலக்காகக் கொண்டு ரஷ்யா, அண்மை நாள்களில் நீண்ட தூரம் பாயும் ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால், உக்ரேனின் எரிசக்தி அமைப்புகளில் குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் விவரித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்