எரிசக்தி நெருக்கடிநிலை: எக்குவடோரில் அவசரநிலை பிரகடனம்

எரிசக்தி நெருக்கடிநிலை: எக்குவடோரில் அவசரநிலை பிரகடனம்

1 mins read
c5675ac7-8c45-41c5-a223-d69b47c59609
60 நாள் அவசரநிலையின்போது எக்குவடோரில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

குவிட்டோ: எக்குவடோரில் கடும் எரிசக்தி பற்றாக்குறை நிலவுகிறது.

எரிசக்தி நெருக்கடிநிலையை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் டேனியல் நொபோவா இரண்டாவது முறையாக ஏப்ரல் 19ஆம் தேதியன்று அவசரநிலை அறிவித்துள்ளார்.

திரு நொபோவா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபராகப் பதவி ஏற்றார்.

போதுமான மின்சாரம் இல்லாததால் இவ்வாரம் தொடக்கத்தில் மின்சார சேவை துண்டிக்கப்பட்டது.

ஆனால் எப்ரல் 21ஆம் தேதியன்று மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

60 நாள் அவசரநிலையின்போது எக்குவடோரில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்