கடலில் வீழ்ந்த ஹெலிகாப்டர்கள்: ஒருவர் பலி, ஏழு பேர் மாயம்

1 mins read
e7c93999-7459-4d2c-b58d-faf2074a96e6
ஜப்பானியக் கடலோரத் தற்காப்புப் படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் பயிற்சியின்போது கடலில் விழுந்தது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானியக் கடலோரத் தற்காப்புப் படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் பயிற்சியின்போது கடலில் விழுந்து நொறுங்கின.

சம்பவம் நிகழ்ந்தபோது அந்த ஹெலிகாப்டர்களில் குறைந்தது எட்டுப் பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் ஒருவர் மாண்டுவிட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் கூறினர்.

ஏழு பேரைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

இரு ஹெலிகாப்டர்களின் பதிவுப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த இரு ஹெலிகாப்டர்களும் ஒன்றின் மீது ஒன்று மோதியிருக்கக்கூடும் என்று ஜப்பானியத் தற்காப்பு அமைச்சர் கிஹாரா மினோரு கூறினார்.

விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்