லெபனானில் ஏழாண்டுகளுக்குப் பிணைக் கைதியாக இருந்த செய்தியாளர் நியூயார்க்கில் காலமானார்

லெபனானில் ஏழாண்டுகளுக்குப் பிணைக் கைதியாக இருந்த செய்தியாளர் நியூயார்க்கில் காலமானார்

1 mins read
3f8e8db1-f9ac-441e-8fa3-59e170b38225
1991ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதியன்று ஜெர்மனியில் இருந்த அமெரிக்க ராணுவ மருத்துவமனையில் மீண்டும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்த (இடமிருந்து வலம்) ஜோசஃப் சிசிப்பியோ, டேரி ஆண்டர்சன், ஏலன் ஸ்டீன். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: லெபனானில் 1975ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப் போர் தலைவிரித்தாடியது. அக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கு அமெரிக்கச் செய்தியாளரான டேரி ஆண்டர்சனை இஸ்லாமியப் போராளிகள் பிணைக் கைதியாக வைத்திருந்தனர். அவர் 1991ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார்.

தி அசோஸியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் மத்திய கிழக்குப் பிரிவு முன்னாள் தலைமைச் செயலாளரான திரு டேரி ஆண்டர்சன், நியூயார்க் நகரில் உள்ள தமது வீட்டில் மரணம் அடைந்ததாக அவரது மகள் சுலோமி ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். திரு ஆண்டர்சனுக்கு 76 வயது. அவரது மரணத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

லெபனான் உள்நாட்டுப் போரின்போது அங்கிருந்த பல மேற்கத்தியர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரையும் காட்டிலும் திரு ஆண்டர்சன் நீண்டகாலம் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்