‘கேஎல்ஐஏ’வில் குடிநுழைவு அதிகாரிகளாகப் பாசாங்கு செய்து வெளிநாட்டினரை மிரட்டிப் பணம் பறிப்பு

‘கேஎல்ஐஏ’வில் குடிநுழைவு அதிகாரிகளாகப் பாசாங்கு செய்து வெளிநாட்டினரை மிரட்டிப் பணம் பறிப்பு

1 mins read
3aa0dcde-3153-486a-a4ba-b2ac55c238c2
மலேசியாவுக்கு முதல்முறையாகப் பயணம் மேற்கொள்ளும் தெற்கு ஆசியப் பயணிகளை மோசடிக்காரர்கள் குறிவைப்பதாகக் கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செப்பாங்: கேலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) குடிநுழைவு அதிகாரிகளாகப் பாசாங்கு செய்து வெளிநாட்டினரை மிரட்டிப் பணம் பறிக்கும் பிரச்சினை தலைதூக்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தெற்கு ஆசியாவிலிருந்து மலேசியாவுக்கு முதல்முறையாகப் பயணம் மேற்கொள்பவர்கள் குறிவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, பங்ளாதேஷ் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே இந்தக் கொடுமை இழைக்கப்படுவதாக தி ஸ்டார் நாளிதழிடம் தெரிவிக்கப்பட்டது.

மலேசியாவுக்கு முதல்முறையாகப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தானிய ஆடவரை ஆடவர் ஒருவர் மிரட்டிப் பணம் பறித்ததைக் காட்டும் பல காணொளிகள் டிக்டோக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

குறிப்புச் சொற்கள்