மகாதீர் மீது ஊழல் விசாரணை

மகாதீர் மீது ஊழல் விசாரணை

1 mins read
0e95700f-d9f1-4dd6-afaa-5ca79cb179f0
முன்னாள் மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் மகம்மது. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது மீது அவரது மகன்கள் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவர் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 25) தெரிவித்தார்.

மலேசிய ஊழல் தடுப்புப் பிரிவு (எம்ஏசிசி), கடந்த ஜனவரி மாதம் டாக்டர் மகாதீரின் மகன்களான மிர்ஸான், மோக்ஸானி ஆகிய இருவரையும் தங்களின் சொத்து விவரங்களை வெளியிடுமாறு உத்தரவிட்டது. அவ்விருவரும் வர்த்தகர்கள் ஆவர்.

வெளிநாடுகளில் அவர்களுக்கு இருக்கக்கூடிய வர்த்தகம் சார்ந்த அம்சங்கள் குறித்து விசாரணை இடம்பெற்றுள்ளது.

டாக்டர் மகாதீர், அவரது மகன்கள் ஆகியோர் மீது நடத்தப்படும் விசாரணை குறித்து எம்ஏசிசி தலைமை ஆணையர் அஸாம் பாக்கி மேல்விவரங்களைத் தர மறுத்தார்.

குறிப்புச் சொற்கள்