ஹெலிகாப்டர்கள் விபத்து: மாண்டவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

ஹெலிகாப்டர்கள் விபத்து: மாண்டவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

1 mins read
4242ed89-35f4-4282-8c10-b9b25a189079
மாண்ட அதிகாரிகளின் இறுதிச் சடங்குகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.  - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசியாவின் பேராக் மாநிலத்தின் லுமுட் நகரில் அந்நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகின.

விபத்தில் 10 அதிகாரிகள் மாண்டனர். மாண்டவர்களின் நல்லுடல் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மாண்டவர்களின் குடும்பத்தினருக்கு 2,800 வெள்ளி நிதியுதவி அளிக்கப்படும் என மலேசிய தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மாண்ட அதிகாரிகளின் இறுதிச் சடங்குகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.

மலேசியாவின் 90வது கடற்படைத் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்த ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாக மலேசியத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்