சுற்றுலாப் பயணிகளால் தொல்லை; மவுண்ட் ஃபுஜியை மறைக்க முடிவு

1 mins read
50b468ee-6024-4edf-9915-96801b7b1f7d
மவுண்ட் ஃபுஜியை தூரத்தில் இருந்து படம்பிடிக்க பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரும்புவார்கள். அதனால் அதன் அருகே உள்ள நகர்களில் அவர்களின் கூட்டம் அலைமோதும். - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடங்களில் மவுண்ட் ஃபுஜியும் ஒன்று.

மவுண்ட் ஃபுஜியை தூரத்தில் இருந்து படம்பிடிக்க பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரும்புவார்கள். அதனால் அதன் அருகே உள்ள நகர்களில் அவர்களின் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விதிமுறைகளை மதிக்காமல் தொல்லை தருவதாக ஃபுஜிகாவாகுஜிக்கோ நகரின் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

அதனால் அந்நகரில் இருந்து மவுண்ட் ஃபுஜியைப் பார்க்கும் இடத்தில் 2.5 மீட்டர் உயரத்திலும், 20 மீட்டர் அகலத்திலும் ஒரு வலையை வைக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வலை மவுண்ட் ஃபுஜியை மறைக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு வரமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

அடுத்த வாரம் முதல் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

“வலை அமைப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை, ஆனால் சுற்றுலாப் பயணிகள் குப்பைகளை அதிகமாகப் போடுகிறார்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்றனர், சில நாள்கள் கட்டுக்கடங்காத அளவில் மக்கள் கூட்டம் சாலைகளில் உள்ளன, இவற்றை எல்லாம் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்