கொள்ளை: ஐந்து காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை

கொள்ளை: ஐந்து காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை

1 mins read
b90e49c2-f1c0-489c-bac3-252532778860
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் துன் ரசாக்கில் இருக்கும் ஒரு வீட்டில் ஏப்ரல் 7ஆம் தேதியன்று வெளிநாட்டு ஆடவர் ஒருவரிடமிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. - படம்: இணையம்

கோலாலம்பூர்: வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 260,000 ரிங்கிட் ($76,600) பணத்தைக் கொள்ளையடித்ததாகச் சந்தேதிக்கப்படும் ஏழு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஐவர் மலேசியக் காவல்துறை அதிகாரிகள்.

இந்த ஐவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி முகம்மது இஸா கூறினார்.

விசாரணையின் கண்டுபிடிப்புகளைப் பொறுத்து, அவர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

அந்த ஐந்து அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் துன் ரசாக்கில் இருக்கும் ஒரு வீட்டில் ஏப்ரல் 7ஆம் தேதியன்று வெளிநாட்டு ஆடவர் ஒருவரிடமிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்