அமெரிக்கக் காவல்துறையினரால் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை

அமெரிக்கக் காவல்துறையினரால் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை

படம்: பிக்சாபே

26 Apr 2024 - 4:39 pm

1 mins read

டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டுக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 

அந்தச் சம்பவம், ஏப்ரல் 21ஆம் தேதி நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது சச்சின் சாஹ என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 

உயிரிழந்த ஆடவர், 51 வயது மாது ஒருவரைக் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. 

அதன் காரணமாக காவல்துறையினர் அவரைக் கைது செய்ய முயற்சி செய்தனர்.

அப்போது, கைதுசெய்ய முயன்ற இரண்டு காவல்துறை அதிகாரிகளை அந்த ஆடவர் தாக்க முயற்சித்தபோதே, அவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், தாக்கப்பட்ட மாது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்புச் சொற்கள்
ஆடவர்கொலை