அருகிவரும் உள்ளூர் தாவரங்களைக் குறிக்கும் அஞ்சல்தலைகள்

1 mins read
373b3d9e-80b4-47f5-91d5-30480959ba27
அஞ்­சல்­த­லை­க­ளின் விலை 80 காசி­லி­ருந்து 2 வெள்ளி வரை இருக்­கும். - படம்: சிங்­கப்­பூர் அஞ்­சல் துறை (சிங்­போஸ்ட்)

சிங்கப்பூரில் அரு­கி­வ­ரும் தாவர வகை­க­ளைக் குறிக்­கும் நான்கு அஞ்­சல் தலை­களை சிங்­கப்­பூர் அஞ்­சல் துறை (சிங்­போஸ்ட்) வெளி­யி­ட்டுள்ளது.

‘டைகர் பீட்டல்’ எனும் வெற்றிலை வகை, பலாப்பழம் போல் காட்சியளிக்கும் ‘ஸ்குவிரில் ஜாக்’, இரண்டு மடிப்புகள் கொண்ட அவரை வகை, கட்சூரா ஸ்கேன்டென் என்னும் தாவர வகை ஆகிய அரு­கி­வ­ரும் தாவரங்களுக்கு அஞ்சல்தலைகள் வெளி­யி­டப்படு­கின்­றன.

பல்­லு­யிர் விழா 2024ஐ முன்­னிட்டு இவை வெளி­யி­டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டுக்கான பல்­லு­யிர் விழா மே 25, 26 ஒன் பொங்கோலில் நடக்கும் என்று தேசிய பூங்­காக் கழ­க­ம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அஞ்­சல்­த­லை­க­ளின் விலை 80 காசி­லி­ருந்து 2 வெள்ளி வரை இருக்­கும். அஞ்­சல் நிலை­யங்­கள், அஞ்­சல் தலை விற்­கும் கடை­கள், shop.singpost.com எனும் இணை­யக் கடை ஆகி­ய­வற்­றில் இருப்பு இருக்­கும் வரை கிடைக்­கும்.

குறிப்புச் சொற்கள்