‘எனக்கு 101 வயது; ஆனால் குழந்தை என்கிறார்கள்!’

‘எனக்கு 101 வயது; ஆனால் குழந்தை என்கிறார்கள்!’

படம்: இணையம்

28 Apr 2024 - 8:24 pm

1 mins read

வாஷிங்டன்: மூதாட்டிக்கு 101 வயது. ஆனால், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பதிவு அமைப்புமுறையில் உள்ள கோளாறு காரணமாக எப்போதும் குழந்தை என்று இவரை நினைத்துவிடுகிறார்கள்!

பெட்ரிஷா என்ற அந்த மூதாட்டி 1922ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆனால், இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள இயலாத அந்த அமைப்புமுறை, அவர் 2022ல் பிறந்தவர் என்று பதிவு செய்துவிடுகிறது.

பலமுறை குழந்தை வருவதாக எண்ணி விமான நிறுவனத்தாரும் ஏமாந்துள்ளனர்!

குழந்தையைத் தூக்கிக்கொள்ளலாம் என்று நினைத்த விமான நிலையப் பணியாளர்கள், விமான நிலைய முனையத்தில் மூதாட்டிக்கான போக்குவரத்து ஏற்பாட்டைச் செய்யத் தவறிவிடுகின்றனர். இதனால், சக்கர நாற்காலிக்காக வெகுநேரம் விமானத்திலேயே காத்திருக்கும் சூழலும் பெட்ரிஷாவுக்கு ஏற்பட்டது.

இணையத்தின்வழி பெட்ரிஷாவின் மகள் தன் தாயாருக்காக விமானச் சீட்டை வாங்கும்போது பிறந்த ஆண்டு 1922 என்பதற்குப் பதிலாக 2022 என்று பதிவாகிவிடுகிறது.

விமான நிலையத்தின் கணினிக் கட்டமைப்பால் இத்தனை ஆண்டுகளுக்கு முன்பான ஓர் ஆண்டைப் பதிவுக்கு ஏற்க இயலாத நிலையில், 100 ஆண்டுகளுக்குப் பிந்திய ஓர் ஆண்டைப் பதிவுசெய்துகொள்வதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
மூதாட்டிசக்கர நாற்காலிபோக்குவரத்துகுழந்தை