தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஃபா மீது இஸ்‌ரேல் தாக்குதல்; குறைந்தது 13 பாலஸ்தீனர்கள் மரணம்

1 mins read
50ac8a5e-0070-45d8-a147-c1c88aa95c12
இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தரைமட்டமான வீடு. - படம்: ராய்ட்டர்ஸ்

கெய்ரோ: காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ராஃபா நகரம் மீது இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 13 பாலஸ்தீனர்கள் மாண்டதாக அந்நகர மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று வீடுகள் தரைமட்டமானதாக அவர்கள் கூறினர்.

தாக்குதலில் 15 பேர் மாண்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

காஸா நகரில் இரண்டு வீடுகளை இஸ்‌ரேலியப் போர் விமானங்கள் தகர்த்தன என்று அப்பகுதியைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

இதில் பலர் மாண்டதாக அவர்கள் தெரிவித்தனர். தாக்குதல் காரணமாகப் பலர் காயமடைந்ததாக அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்