எரிசக்தி நிலையங்களை ரஷ்யா தாக்குவதாக உக்ரேன் புலம்பல்

1 mins read
f125117f-0aa4-4b9c-8325-d9c8ba3fdf7b
ஏப்ரல் 27ஆம் தேதி ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியபோது மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் செல்லப்பிராணிகளுடன் தஞ்சம் புகுந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

கியவ்: மூன்று வட்டாரங்களில் உள்ள முக்கிய எரிசக்தி நிலையங்களை ரஷ்யா தாக்கியிருப்பதாக உக்ரேன் புலம்பியிருக்கிறது.

இதில் நான்கு நிலையங்கள் மோசமாக சேதமடைந்தது என்று உக்ரேன் கூறியிருக்கிறது.

மத்திய உக்ரேனில் உள்ள டினிபுரோபெட்ரோவ்ஸ், மேற்கு வட்டாரம் ஆகிய இடங்களில் உள்ள எரிசக்தி நிலையங்களை இலக்காகக் கொண்டு ரஷ்யா தாக்குகிறது என்று உக்ரேனிய எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ கூறினார்.

இரவு முழுவதும் விடாமல் கடுமையாக ரஷ்யா தாக்கியதில் நான்கு நிலையங்கள் சேதமடைந்தது என்று உக்ரேனின் ஆகப்பெரிய எரிசக்தி நிறுவனமான டிடெக் தெரிவித்தது.

“எதிரி நாடு, மீண்டும் உக்ரேனிய எரிசக்தி வசதிகள் மீது பெரிய அளவில் குண்டுகளை வீசியது,” என்று டிடெக் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“நிறுவனத்தின் உபகரணங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. எரிசக்தி நிலையத்தின் ஊழியர்கள் சேதங்களை சீர்செய்து வருகின்றனர்,” என்று அது மேலும் கூறியது.

ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் டிடெக் கூறியது.

ஆனால் மேல் விவரங்களை அது வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்