தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரு மாதங்களுக்கு முன்பு பிரபல பாப் இசைக் கலைஞரை சந்தித்த சிறுமி மரணம்

1 mins read
695ca519-5bc0-42fc-aed7-5e3b8645ee59
சிட்னியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் டெய்லர் ஸ்விஃப்ட்டிடம் இருந்து ‘22 ஹேட்’ என்ற தொப்பியைப் பெறும் சிறுமி ஸ்கார்லட் ஆலிவர். - படம்: கெட்டி இமேஜஸ்

இரண்டு மாதங்களுக்கு முன்பு இசை நிகழ்ச்சி ஒன்றில் பிரபல அமெரிக்க பாப் இசைக் கலைஞர் டெய்லர் ஸ்விஃப்ட்டை சந்தித்த ஒன்பது வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

ஒருவகை மூளை புற்றுநோயை (ஹை-கிரேட் கிளியோமா) எதிர்த்துப் போராடிய ஸ்கார்லட் ஆலிவர், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிப்ரவரி பிற்பகுதியில் நடந்த ‘ஈராஸ்’ சுற்றுப்பயண இசை நிகழ்ச்சியில் ஸ்விஃப்ட்டிடம் இருந்து ‘22 ஹேட்’ என்ற தொப்பியைப் பெற்றார்.

ஸ்விஃப்ட்டை கட்டியணைக்கும் வாய்ப்பையும் பெற்ற அவர், உலகளவில் ஏராளமானோரின் இதயங்களை வென்றார்.

இந்நிலையில், மே 7ஆம் தேதி ஸ்கார்லட்டின் 10வது பிறந்தநாளுக்கு சில நாள்களே உள்ள நிலையில், தம்முடைய மகளின் மரணத்தை தந்தை பால் இணையத்தில் அறிவித்தார். கடந்த ஒரு மாதமாக ஸ்கார்லட்டின் உடல்நிலை மோசமடைந்தது.

பிப்ரவரி 23ஆம் தேதி சிட்னியில் நடைபெற்ற ஸ்விஃப்ட்டின் தொடக்க இசை நிகழ்ச்சியில் ஸ்கார்லட் கலந்துகொண்டார். அப்போது மேடையில் ஸ்விஃப்ட் உடனான ஸ்கார்லட்டின் சிறப்பு தருணம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

குறிப்புச் சொற்கள்