இந்தோனீசியாவில் மீண்டும் குமுறிய ருவாங் எரிமலை

இந்தோனீசியாவில் மீண்டும் குமுறிய ருவாங் எரிமலை

1 mins read
76e866ba-b53b-483c-bd70-5b0e63f1aef8
ருவாங் எரிமலை, எரிமலைக் குழம்பையும் சாம்பலையும் கக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலாவேசித் தீவிற்கு அருகே உள்ள ருவாங் எரிமலை ஏப்ரல் 30ஆம் தேதி மீண்டும் குமுறியது.

அது எரிமலைக் குழம்பு, சாம்பல் ஆகியவற்றைக் கக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அந்த எரிமலை குமுறியபோது அதற்கு அருகில் உள்ள கிராமங்களில் வாழும் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். மனாடோ விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதி காலை ருவாங் எரிமலை குமுறியபோது ஆக உயரிய விழிப்புநிலை அறிவிக்கப்பட்டது.

எரிமலைக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்