இந்திய உளவாளிகள் குறித்து மௌனம் காக்கும் ஆஸ்திரேலியா

1 mins read
895c5eab-5903-44ac-9361-be1983ae0957
குற்றச்சாட்டுகள் தொடர்பாக கான்பராவில் உள்ள இந்திய தூதரகத்திடமும் ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் அணுகியுள்ளனர்.   - படம்: இபிஏ

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்திய உளவாளிகள் சிலர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் ஆஸ்திரேலியாவின் பொது செய்தி ஊடகமான ‘ஏபிசி’ தகவல் வெளியிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு இந்திய உளவாளிகள் ஆஸ்திரேலியாவின் தற்காப்பு ரகசியங்களைத் திருடவும் அங்குள்ள வெளிநாடு வாழ் மக்களைக் கண்காணிக்கவும் பணியமர்த்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

உளவாளிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலியாவின் ‘ஏபிசி’ முதல்முதலாக வெளியிட்டது. ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புப் பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது பெயர்களைக் குறிப்பிடாமல் ‘ஏபிசி’யிடம் தகவல்களை வெளியிட்டதாக அது கூறியது.

கிடைத்தத் தகவல்களை உறுதி செய்யும் நோக்கில் ஆஸ்திரேலிய அமைச்சர்களிடம் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டு வருகின்றனர். ஆனால் அமைச்சர்களிடம் இருந்து பதில் ஏதும் இல்லை.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நெருக்கமான உறவு வளர்ந்து வருகிறது. அதனால் ஆஸ்திரேலியப் பிரதமர், தற்காப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர், நிதி அமைச்சர் என பலரும் உளவாளிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பேசுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

2021ஆம் ஆண்டு உளவாளிகள் ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் ‘ஏபிசி’ கூறுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய தூதரகத்திடமும் அந்நாட்டு செய்தியாளர்கள் அணுகியுள்ளனர். மேலும் புதுடெல்லி இத்தகவலை மறுத்துள்ளதாக அறியப்படுகிறது. 

குறிப்புச் சொற்கள்