மலேசியாவில் சூடாகும் அறுவடை: இனிப்பான மாம்பழங்கள், தரமான டுரியான்

கோலாலம்பூர்: தென்கிழக்கு ஆசியாவில் கொளுத்தும் வெயிலால் அசாதாரணமான சூழல் காணப்படுகிறது. அவ்வட்டாரத்தை வெப்ப அலை வாட்டியெடுக்கிறது.

ஆனால் மலேசியாவின் பழ விவசாயிகள், வரப்போகும் மாதங்களில் நல்ல அறுவடையை எதிர்பார்க்கின்றனர். இருந்தாலும் நாட்டின் முக்கியமான செம்பனை எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படும் என நம்பப்படுகிறது.

டுரியான் தொழில்துறை, குறிப்பாக புகழ்பெற்ற ‘மூசாங் கிங்’ ரக டுரியானின் அறுவடை சிறப்பாக இருக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.

இது ஒரு புறம் இருக்க, சுட்டெரிக்கும் வெயிலால் மலேசியாவின் பிரபலமான இனிப்பு மாம்பழத்தின் (ஹருமானிஸ்) சுவை மேலும் கூடும் எனச் சொல்லப்படுகிறது.

டுரியான் மரங்களுக்கு மிகவும் வெப்பமான பருவநிலை தேவைப்படுகிறது என்று பிரைட்ஹிட் சினர்ஜி எனும் டுரியான் பண்ணையின் நிர்வாக இயக்குநரான பால் மாக் தெரிவித்தார்.

மலேசிய வானிலை நிலையம், எல்நினோ பருவநிலை மாற்றத்தால் 2023 நவம்பர் 11ல் வெப்ப அலை தொடங்கியதாகத் தெரிவித்துள்ளது.

திரு மாக், தனது டுரியான் மரங்களில் சுமார் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக பூ பூத்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் குறிப்பிட்டார்.

இது, மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான டுரியான் பருவத்தில் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்பதை உறுதி செய்வதாகவும் அவர் சொன்னார்.

ஊடகங்களிடம் பேசிய சில விவசாயிகள், அக்டோபர் வரை டுரியான் பருவம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளனர். வெப்பம் காரணமாக பூ பூப்பதற்கு நீண்டகாலம் ஆகிறது. இதனால் பழங்களும் மெதுவாக பழுக்கின்றன.

கடுமையான வெப்பத்தால் இயற்கையான உயிர்வாழும் முறையால் டுரியான் மரங்கள் சுற்றியுள்ள உரத்தையும் ஊட்டச்சத்துகளையும் அதிகம் உறிஞ்சுகின்றன என்று திரு மாக் விளக்கினார். இதனால் டுரியானின் சுவை, நிறம், மணம், அதன் தன்மை கூடுகிறது என்றார் அவர்.

ஆனால் டுரியான் பழுப்பதற்கு முன்பு பூக்கள் காய்ந்துவிடும் அல்லது காற்று அல்லது மழையால் சேதமடையும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

இதே போல இவ்வாண்டு இனிப்பான (ஹருமானிஸ்) மாம்பழங்களின் விளைச்சலும் அதிகமாக இருக்கும் என மலேசியா எதிர்பார்க்கிறது.

மலேசியாவின் வடகோடி மாநிலமான பெர்லிசில் இந்த வகை மாம்பழங்கள் வெப்பமான சூழ்நிலையில் செழித்து வளரும். இப்பகுதியில் சராசரி வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இது, 2023ல் பதிவானதைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

மாம்பழங்களின் அறுவடைக் காலம் பொதுவாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இருக்கும். டுரியான்களைப் போலவே, மாம்பழங்களும் வெப்பத்தின் காரணமாக மெதுவாக வளர்ச்சியடைகின்றன. ஆனால் அதிக அறுவடை மற்றும் அதிக தரம் கொண்ட பழங்களை நீண்ட காலத்திற்கு, அதாவது ஜூன் இறுதி வரை எதிர்பார்க்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!