பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 20 பேர் பலி

1 mins read
cf54de3f-ab51-4138-9a94-d72431c21f9c
படம்: - தமிழ் முரசு

பெஷாவர்: பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 3) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 20 பேர் மாண்டதாகவும் மேலும் 21 பேர் காயமடைந்ததாகவும் அரசாங்கப் பேச்சாளர் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

ராவல்பிண்டியிலிருந்து மலைப்பகுதியான கில்கிட்-பால்டிஸ்தானுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்தது.

மீட்புப் பணியாளர்கள் விரைந்து பணியில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பாகிஸ்தானில் அடிக்கடி கோர விபத்துகள் நடைபெறுகின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காததும் கிராமப்புறங்களில் சாலைகள் சரிவரப் பராமரிக்கப்படாததும் இதற்குக் காரணங்கள் என்பதை ராய்ட்டர்ஸ் சுட்டியது.

குறிப்புச் சொற்கள்
பாகிஸ்தான்பேருந்துவிபத்துஉயிரிழப்பு