காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தொடர்கிறது

1 mins read
a1cc6bd7-4d8e-422d-89d5-e94e82e813f5
காஸாவின் தென்பகுதியில் உள்ள ராஃபா நகரம் மீது இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் வீடுகள் தகர்ந்தன. - படம்: ராய்ட்டர்ஸ்

கெய்ரோ: காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொடர்கிறது.

மே 5ஆம் தேதியன்று எகிப்து மற்றும் கத்தார் அதிகாரிகளுடன் ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போர் நிறுத்தம் குறித்து தீர்வு இன்னும் எட்டப்படவில்லை என்று பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமாயின் இஸ்‌ரேல் நடத்தும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இஸ்‌ரேலியப் படைகள் காஸாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது.

ஆனால் காஸா மீது இஸ்‌ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று ஹமாஸ் தரப்பு கூறியது.

இந்நிலையில், ஏறத்தாழ 130 பிணைக்கைதிகளில் சிலரை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்பதில் இஸ்‌ரேல் உறுதியாக உள்ளது.

ஹமாஸை வேரோடு அழிப்பதே தனது இலக்கு என்று இஸ்‌ரேல் தெரிவித்தது.

அந்த இலக்கை எட்டும் வரை காஸா மீதான தாக்குதல்கள் தொடரும் என்று அது கூறியது.

குறிப்புச் சொற்கள்
ஹமாஸ்இஸ்‌ரேல்