அமெரிக்காவை உலுக்கிய சுழல்காற்றுகள்

அமெரிக்காவை உலுக்கிய சுழல்காற்றுகள்

1 mins read
8b44e851-2a24-41cb-bca4-9db0984ef4c6
சுழல்காற்றுகள் காரணமாக ஓக்லஹோமாவில் பல பண்ணைகள் அழிந்தன. - படம்: நியூயார்க் டைம்ஸ்

ஓக்லஹோமா சிட்டி: அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளை சுழல்காற்றுகள் உலுக்கின. அமெரிக்க நேரப்படி மே 6ஆம் தேதி மாலை குறைந்தது எட்டு சுழல்காற்றுகள் கரையைக் கடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இப்பகுதிகளில் கடுமையான வானிலை நிலவுவது மிகவும் அரிது.

ஆனால், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்றும் அமெரிக்க வானிலை மையம் முன்னுரைத்துள்ளதை அடுத்து, அப்பகுதி மக்கள் அதற்குத் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், ஓக்லஹோமா மாநிலத்தில் நான்கு சுழல்காற்றுகள் தாண்டவமாடின. டெனசி, சவுத் டக்கோட்டோ, நெபிராஸ்கா ஆகிய மாநிலங்களும் பாதிக்கப்பட்டன.

சுழல்காற்றுகள் காரணமாக ஓக்லஹோமாவில் சில பண்ணைகள் அழிந்தன. பல மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன் கார்களும் சேதமடைந்தன. ஆனால் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்