பால்ட்டிமோர் பாலம்: ஆறாவது சடலம் மீட்பு

பால்ட்டிமோர் பாலம்: ஆறாவது சடலம் மீட்பு

1 mins read
8fd357f9-a9af-42b1-8036-ca025afe6fd1
கப்பல் மோதியதில் இடிந்து ஆற்றில் விழுந்த ஃபிரான்சிஸ் ஸ்கோட் கீ பாலம். மொத்தம் ஆறு பேர் மாண்டனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பால்ட்டிமோர்: பால்ட்டிமோரில் உள்ள ஃபிரான்சிஸ் ஸ்கோட் கீ பாலம் இடிந்து விழுந்ததில் மாண்ட ஆறாவது நபரின் சடலம் மே 7ஆம் தேதியன்று ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது.

மார்ச் 26ஆம் தேதியன்று அந்தப் பாலத்தின் மீது கப்பல் ஒன்று மோதியதில் அது இடிந்து ஆற்றில் விழுந்தது.

அப்போது பாலத்தில் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் சிலர் ஆற்றில் விழுந்தனர்.

அவர்களில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மொத்தம் ஆறு பேர் மாண்டனர். அனைத்து சடலங்களையும் கண்டுபிடித்து மீட்க கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் ஆகின.

மாண்டவர்கள் அனைவரும் எல் சால்வடோர், குவாட்டமாலா, ஹோன்டுராஸ், மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

மாண்ட ஆறு பேரும் மேரிலேண்ட் மக்களின் நினைவில் என்றென்றும் இருப்பர் என்று அம்மாநில ஆளுநர் வெஸ் மோர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காபாலம்மரணம்