தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இம்ரான் கானின் மனைவிக்குச் சிறைத் தண்டனை விதிக்க நீதிமன்ற உத்தரவு

1 mins read
145f1dfc-3d4e-401a-a4b8-f3a018f15960
மறைக்கப்பட்டு லாகூர் உயர்நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்படும் இம்ரான் கான், அவரின் மனைவி பு‌ஷ்ரா பிபி. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவியின் கோரிக்கைக்கேற்ப அவரைச் சிறைக்கு இடம் மாற்ற அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

வீட்டுக் காவலில் வைப்பதற்குப் பதிலாக தன்னைச் சிறையில் வைக்குமாறு புஷ்ரா பிபியின் தரப்பு கேட்டுக்கொண்டிருந்தது. தற்போது அவர் இஸ்லாமாபாத்தில் மலை உச்சியில் இருக்கும் இம்ரான் கானின் மாளிகையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான பரிசுப் பொருள்களை சட்டவிரோதமாக விற்றதாக கடந்த ஜனவரி மாதம் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து பு‌ஷ்ரா பிபி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்