டிரம்ப்புடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக ஸ்டார்மி டேனியல்ஸ் வாக்குமூலம்

நியூயார்க்: ஆபாசப் பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ், 2006ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக அவரின் குற்றவியல் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதைப் பற்றித் தான் நினைக்க விரும்பாததாகவும் அந்த விவகாரம் பொதுப்படையாக ஆகிவிடும் என்று தான் அஞ்சியதாகவும் திருவாட்டி டேனியல்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2016ஆம் அண்டு அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு பாலியல் உறவு வைத்துக்கொண்டதை மறைக்க 77 வயது டிரம்ப், 45 வயது டேனியல்சுக்குப் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை நடந்துவருகிறது. இருவருக்கும் இடையிலான பாலியல் உறவு குறித்து திருவாட்டி டேனியல்ஸ் நீதிமன்றத்தில் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.

அந்த விவகாரம் 2018ஆம் ஆண்டில் பொதுப்படையான பிறகு தனது வாழ்க்கையில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக அவர் கூறினார். வீட்டில் தான் ஒதுக்கப்பட்டதாகவும் தனக்குத் தொந்தரவு இழைக்கப்பட்டதாகவும் திருவாட்டி டேனியல்ஸ் நீதிபதிக் குழுவின் முன்னிலையில் சொன்னார்.

திருவாட்டி டேனியல்சின் வாக்குமூலத்தை திரு டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் தாக்கிப் பேசினர். அண்மை ஆண்டுகளில் திரு டிரம்ப்புடனான உறவு குறித்து திருவாட்டி டேனியல்ஸ் முன்பின் முரணானத் தகவல்களை வெளியிட்டதாகக் கூறி அவர்கள் வாதிட்டனர்.

பாலியல் உறவை மறைக்க திருவாட்டி டேனியல்சுக்கு 130,000 டாலர் (176,270 வெள்ளி) வழங்கியதுடன் அதை மறைக்கப் போலியான வர்த்தகக் கணக்குகளைக் காண்பித்ததாக திரு டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகளையும் திருவாட்டி டேனியல்சுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதையும் திரு டிரம்ப் மறுக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!