நேஷ்வில்: அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள மிசோரி, இலினோய், கென்டக்கி, டெனசி ஆகிய நான்கு மாநிலங்களையும் மே 8ஆம் தேதியன்று புயல் உலுக்கியது.
பலத்த காற்று, இடியுடன் கூடிய மழையால் பேரளவிலான சேதம் ஏற்பட்டது.
சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.
டெனசி மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து வாகனம் ஒன்றின் மீது விழுந்ததில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
சுழல்காற்று காரணமாக மௌரி வட்டாரத்தில் ஒருவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
புயலின் தாண்டவம் காரணமாகப் பல வீடுகள் சேதமடைந்தன.
அவற்றிலிருந்து வெளியே வர முடியாமல் பலர் மாட்டிக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.
காயம் அடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மௌரி கவுன்ட்டி சுகாதாரத் துறையின் செய்தித்தொடர்பாளர் திருவாட்டி ரீட்டா தாம்சன் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை என்றார் அவர்.

