‘விபத்துக்குள்ளான மலேசிய ஹெலிகாப்டர்கள் பறக்கத் தகுதியுடையவை’

‘விபத்துக்குள்ளான மலேசிய ஹெலிகாப்டர்கள் பறக்கத் தகுதியுடையவை’

1 mins read
b2640196-5c60-410e-8b49-8f4148bac199
இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் அவற்றில் இருந்த பத்துப் பேர் உயிரிழந்தனர். - படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: மலேசியாவின் பேராக் மாநிலம், லுமுட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி விபத்துக்குள்ளான இரு அரச மலேசியக் கடற்படை ஹெலிகாப்டர்கள் பறக்கத் தகுதியுடையவை என்று விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இரு ஹெலிகாப்டர்களிலும் பராமரிப்பு, நடைமுறைகளைப் பின்பற்றியதாக கடற்படை அதன் அறிக்கையில் தெரிவித்தது.

“பன்னோக்கு தரவுப் பதிவுப்பெட்டியில் இருந்து மே 3ஆம் தேதி பெறப்பட்ட தரவுப் பகுப்பாய்வு, விசாரணைக் குழுவால் மேலும் ஆராயப்படுகிறது,” என்று கடற்படை கூறியது.

ஹெலிகாப்டர் பணியாளர்கள் அனைவரும் நல்ல உடல்நிலையிலும் ஹெலிகாப்டரை இயக்க உடற்தகுதியுடனும் இருந்ததாக அது வியாழக்கிழமை சொன்னது.

விபத்து குறித்த இறுதி அறிக்கை மே 29ஆம் தேதி நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்