சொத்து விலை ஊகத்தைத் தடுக்க ஜோகூர் பரிசீலனை

சொத்து விலை ஊகத்தைத் தடுக்க ஜோகூர் பரிசீலனை

1 mins read
dcf7a085-ef65-42eb-a5a6-965838bab8b8
ஜோகூர் மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி. - படம்: த ஸ்டார்

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் உருவாக்கப்படுவதன் தொடர்பில் எழும் சொத்துவிலை ஊகங்களைத் தடுக்க புதிய கொள்கைகளை அமல்படுத்துவது பற்றி ஜோகூர் மாநில அரசாங்கம் பரிசீலிக்கிறது.

பொருளியல் மண்டல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இடையே அதிகரித்து வரும் சொத்து விலைகளுக்கு ஊகங்கள் காரணம் என்று மாநிலத்தின் குடியிருப்பாளர்களும் வெளிவட்டார முதலீட்டாளர்களும் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஜோகூர் மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி கூறினார்.

ஊகங்கள் எழுந்ததன் விளைவாக பல்வேறு பகுதிகளில் நில மற்றும் குடியிருப்புச் சொத்துகளின் விலைகள் கணிசமாக ஏற்றம் கண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதனால் நிலைமையைப் பரிசீலித்து கட்டுப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் சொன்னார்.

சொத்து விலைகளை ஏற்றிவிடும் ஊகங்களைத் தடுக்க ஜோகூருக்குப் புதிய கொள்கைகள் தேவை,” என்று ஞாயிற்றுக்கிழமை (மே 12) முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்