ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சரை மாற்றும் புட்டின்

1 mins read
d82a9b3e-54c7-4607-b174-ec25ca8f5c20
திரு செர்கே ஷோய்குவை (இடது) ரஷ்யப் பாதுகாப்பு மன்றத்தின் செயலாளராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நியமிக்க இருக்கிறார். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

மாஸ்கோ: ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சில் பேரளவிலான மாற்றத்தைக் கொண்டு வர இருக்கிறார் அந்நாட்டு அதிபர் விளாடிமர் புட்டின்.

2012ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சராகப் பதவி வகித்து வரும் 68 வயது திரு செர்கே ஷோய்குவை ரஷ்யாவின் பாதுகாப்பு மன்றத்தின் செயலாளராக அதிபர் புட்டின் நியமிக்க இருக்கிறார்.

அவருக்குப் பதிலாக துணைப் பிரதமரும் பொருளியல் நிபுணருமான ஆண்ட்ரே பெலுசோவ் புதிய தற்காப்பு அமைச்சராகப் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனுடன் ரஷ்யா போரிட்டு வரும் நிலையில் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

திரு ஷோய்கு, அதிபர் புட்டினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய அதிபர் புட்டினுடன் திரு ஷோய்கு பல ஆண்டுகளாக ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்