லாஸ் ஏஞ்சலிஸ்: உலகப் புகழ்பெற்ற அமெரிக்க மாயவித்தைக் கலைஞர் டேவிட் காப்பர்ஃபீல்டுக்கு எதிராகப் பல பெண்கள் பாலியல் முறைகேடு புகார் அளித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக அவர் பெண்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்தியதாக பிரிட்டனின் ‘தி கார்டியன்’ நாளிதழ் தெரிவித்தது.
தங்களிடம் காப்பர்ஃபீல்டு தவறான முறையில் நடந்துகொண்டதாக 16 பெண்கள் கூறியதை அது சுட்டியது.
சம்பவம் நிகழ்ந்தபோது சில பெண்கள் 18 வயதுக்கும் குறைவாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மயக்க மருந்து கொடுத்து சுயநினைவு இழக்க வைத்து தங்களுடன் காப்பர்ஃபீல்டு பாலியல் உறவு கொண்டதாகக் குற்றம் சுமத்தியவர்களில் மூவர் கூறினர்.
67 வயது காப்பர்ஃபீல்டு மீது 2018ஆம் ஆண்டில் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு காப்பர்ஃபீல்டு தமக்கு மயக்க மருந்து கொடுத்து சுயநினைவு இழக்க வைத்து பாலியல் ரீதியாகத் தாக்கியதாகத் திருவாட்டி பிரிட்னி லுவிஸ் என்பவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதை காப்பர்ஃபீல்டு மறுத்தார்.
தி கார்டியன் நாளிதழ் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற 16 பெண்களில் திருவாட்டி லுவிசும் ஒருவர்.
இந்த விவகாரம் குறித்து காப்பர்ஃபீல்டின் வழக்கறிஞர்களுடன் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தொடர்புகொண்டது. ஆனால் அவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

