இபூ எரிமலைப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

இபூ எரிமலைப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

1 mins read
667be800-957b-4542-a71c-ed3279815485
மே 15ஆம் தேதி புகை, சாம்பலைக் கக்கிய இபூ எரிமலை. - படம்: இபிஏ

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் இபூ எரிமலைக்கு அருகில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோரை அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (மே 16) அந்த எரிமலை தொடர்பில் ஆக உயர்ந்த விழிப்புநிலை அறிவிக்கப்பட்டிருப்பது இதற்குக் காரணம். தொடர்ந்து இரண்டாவது நாளாக, பேரளவிலான இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து விழிப்புநிலை உயர்த்தப்பட்டது.

இபூ எரிமலை 5,000 மீட்டர் உயரத்திற்கு புகையையும் சாம்பலையும் கக்கியதால், ஏழு கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்திருக்கும் ஏழு கிராமங்களில் வசிக்கும் மக்களை வியாழக்கிழமை பின்னேரத்தில் அதிகாரிகள் வெளியேற்றத் தொடங்கினர்.

வெள்ளிக்கிழமை காலை மீண்டும் குமுறிய இபூ எரிமலை 4,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பலைக் கக்கியது.

குடியிருப்பாளர்கள், அந்த எரிமலையிலிருந்து நான்கு முதல் ஏழு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சாம்பல் தெறித்து விழுந்தால் முகக்கவசம் அணியும்படி அவர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

இந்தோனீசியாவில் ஆக அதிகம் குமுறும் எரிமலைகளில் ஒன்றான இபூ, சென்ற ஆண்டு 21,000க்கும் மேற்பட்ட முறை வெடித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்