தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகே சிங்கப்பூர்-கோலாலம்பூர்ரயில் திட்டம் பற்றி பேச்சு

1 mins read
5b764bf0-0b82-4dfc-8e10-c15296416ea1
மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக். - கோப்புப் படம்:

புத்ராஜெயா: அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகே கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் (எச்எஸ்ஆர்) பற்றி சிங்கப்பூருடன் அதிகாரபூர்வமாக விவாதிக்கப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் அண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட ரயில் திட்டம் அமைச்சர் நிலையில் விவாதிக்கப்படுவதாகவும் அமைச்சரவையில் சமர்பிக்க சரியான நேரத்திற்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“கோலாலம்பூர்-சிங்கப்பூர் ரயில் திட்டம் உட்பட பல விவகாரங்கள் குறித்து சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட்டுடன் விவாதிக்க வேண்டியுள்ளது.

“அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற பிறகு சிங்கப்பூரிடம் உத்தேச ரயில் திட்டம் முன்மொழியப்படும் அல்லது அது குறித்து விவாதிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்,” என்று திரு ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய தளவாட பணிக் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

குறிப்புச் சொற்கள்