பான்ஸ்கா பிஸ்திரிக்கா: ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ மே 15ஆம் தேதியன்று அரசாங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
அவர், தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஸ்லோவாக் மருத்துவர்கள் திங்கட்கிழமை (மே 20) கூடி பிரதமர் ஃபிக்கோவின் உடல்நிலையைப் பரிசோதித்து, அவரை பான்ஸ்கா பிஸ்திரிக்காவிலிருந்து அந்நாட்டுத் தலைநகர் பிராட்டிஸ்லாவாவுக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிப்பார்கள் என அந்நாட்டு அரசு ஊடகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்தன.
ஃபிக்கோவின் உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் அவரால் பேச முடிகிறது என்றும் அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி வியாழக்கிழமை கூறினார்.
இந்தப் படுகொலை முயற்சி ஐரோப்பா முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

