தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்க வலியுறுத்தும் மசோதா நிறைவேற்றம்

1 mins read
20e2ca24-c49a-4e5c-8129-04d93f3f9690
ராஃபா நகரில் உள்ள அகதி முகாமில் குடிதண்ணீர் பிடிக்க வெள்ளிக்கிழமை (மே 17) காத்திருந்த பாலஸ்தீனிய குடிமக்கள். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: குடியரசுக் கட்சியின் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் சபை, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

ஹமாஸ் போராளிக் குழுவுடனான போரில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க இன்னும் அதிகமாகச் செயல்படுமாறு இஸ்ரேலை திரு பைடன் நெருக்கி வரும் வேளையில் இந்த மசோதா நிறைவேறி உள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு உதவிச் சட்ட மசோதாவை ஆதரித்து 224 வாக்குகளும் எதிர்த்து 187 வாக்குகளும் பதிவாயின. இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

அண்மையில் திரு பைனிடம் நடத்தப்பட்ட தொலைக்காட்சி நேர்காணலில், “ராஃபா நகர் மீது இஸ்ரேல் படையெடுப்பை மேற்கொண்டால் என்ன நடக்கும்,” என்று கேட்கப்பட்டது.

“அது நிகழ்ந்தால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டோம்,” என்று அவர் பதிலளித்தார். ஆயுத ஏற்றுமதிதான் அமெரிக்க-இஸ்ரேல் உறவின் அடித்தளமாக இருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில் இந்த இஸ்ரேலை ஆதரிக்கும் கொள்கை அமெரிக்க மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமது நாட்டின் மீது 2023 அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்திய போராளிகளைத் துடைத்து ஒழிப்பதில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மும்முரமாக ஈடுபட்டு போரைத் தீவிரப்படுத்தி வருகிறார்.

போரில் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும் 253 பேர் பிணை பிடிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. ஆயினும், காஸாவில் உள்ள ஹமாஸ் வழிநடத்தும் பாலஸ்தீன அரசாங்கம் 35,272 பேர் அங்கு கொல்லப்பட்டதாகத் தெரிவித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்