தெஹ்ரான்: மே 19ஆம் தேதியன்று ஈரானிய அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் அவர் உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் அவருடன் பயணம் செய்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் உசேன் அமிர் அப்துல்லாஹினும் மாண்டார்.
ஈரானின் அடுத்த உயரிய தலைவராக அவர் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் மரணத்துக்குப் பிறகு, தற்போதைய உயரிய தலைவரான ஆயத்துல்லா அலி காமெனியின் மகன் திரு மொஜ்தாபா காமெனி அப்பொறுப்பை ஏற்பார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
ஈரானிய அரசியலில் திரு மொஜ்தாபா காமெனி திரை மறைவிலிருந்து செயல்படுபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரைப் பலர் இதற்கு முன்பு கண்டதில்லை, அவரைப் பற்றி கேள்விப்பட்டதில்லை.
இருப்பினும், ஈரானில் அவருக்குப் பேரளவில் செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.