தெஹ்ரான்: ஈரானில் அதிபர் தேர்தல் ஜூன் 28ஆம் தேதியன்று நடத்தப்படும்.
மே 19ஆம் தேதியன்று ஈரானிய அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் அதிபர் ரைசி உயிரிழந்தார்.
அவருடன் பயணம் செய்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் உசேன் அமிர் அப்துல்லாஹின் உட்பட எட்டு பேர் மாண்டனர்.
இந்நிலையில், ஈரானின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்க அதிபர் தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மே 30ஆம் தேதியிலிருந்து பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
பதிவு செய்பவர்கள் தேர்தலில் போட்டியிடத் தகுதியானவர்களா என்பது குறித்து சிறப்பு மன்றம் தீர்மானிக்கும்.
இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திரு முகம்மது மொக்பெர் தேர்தலில் களமிறங்குவாரா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

