சிட்னி: ஆஸ்திரேலியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டெல்ஸ்ட்ரா, 2,800 பேர் வரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக செவ்வாய்க்கிழமையன்று (மே 21) தெரிவித்தது.
அந்த எண்ணிக்கை, அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் ஒன்பது விழுக்காடாகும். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலம் டெல்ஸ்ட்ரா சுமார் 350 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரை (314 வெள்ளி) இழக்காமல் பார்த்துக்கொள்ளலாம் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி விக்கி பிரேடி கூறினார்.
பணவீக்கம் உள்ளிட்டவற்றின் தொடர்பிலான பிரச்சினைகளைக் கையாள ஆட்குறைப்பு நடவடிக்கை உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

