ஹனோய்: வியட்னாமின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரை அந்நாட்டு அதிபராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திரு டோ லாமை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக்க வியட்னாம் நாடாளுமன்றம் வாக்களிக்கவிருப்பதாக செவ்வாய்க்கிழமையன்று (மே 21) தெரிவிக்கப்பட்டது. அது, அவரை அதிபர் பதவியில் அமர்த்த வகைசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
வியட்னாமில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு ஆக உயரிய காவல்துறை பதவியாகும். அவரை அப்பொறுப்பிலிருந்து வெளியேற்ற அந்நாட்டு அரசாங்கம் முதலில் திட்டமிடவில்லை.

