உக்ரேன்: ரஷ்யா அனுப்பிய ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன

1 mins read
ecd522dc-5125-41c8-9db4-3ec5b2bf7854
கார்கிவ் நகரைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. - படம்: ராய்ட்டர்ஸ்

கியவ்: உக்ரேனை நோக்கி ரஷ்யா 29 ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதாகவும் அவற்றில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரேனிய விமானப் படை தெரிவித்துள்ளது.

இரவு நேரத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அது கூறியது.

கார்கிவ் நகரில் நான்கு தனியார் வீடுகள், 25 லாரிகள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றை ஆளில்லா வானூர்தி சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதில் ஐந்து பேர் காயமடைந்ததாக உக்ரேனிய உள்துறை அமைச்சு கூறியது.

கார்கிவ் நகரின் போக்குவரத்து உள்கட்டமைப்பைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணை பாய்ச்சியதாகவும் அதில் இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, உக்ரேனிய ராணுவம் பல பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதாகவும் அதன் காரணமாகவே அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடுவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்