லண்டன்: ஆஸ்ட்ராஸெனக்கா நிறுவனம் தனது விற்பனையை கிட்டத்தட்ட இருமடங்கு உயர்த்த இலக்கு கொண்டுள்ளது. விற்பனை 80 பில்லியன் அமெரிக்க டாலர் (S$107.8 பில்லியன்) எட்ட வேண்டும் என்று அது விரும்புகிறது.
2023ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் வருமானம் 45.8 பில்லியன் அமெரிக்க டாலர்.
இந்நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் மேலும் 20 புதிய மருந்துகளை அது அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தத் தகவலை அது மே 21ல் வெளியிட்டது.
புற்றுநோய்க்கான மருந்தைக் கண்டுபிடிப்பதிலும் ஆஸ்ட்ராஸெனக்கா தீவிரம் காட்டுகிறது.

