பல மாதங்களுக்குப் பிறகு உக்ரேன் எல்லைப்படை வீரர்களுக்கு ஆயுதம்

1 mins read
c46a37dc-23a6-4b77-8755-56ac2a8cca1e
கார்கிவ் புறநகர் பகுதியில் ரஷ்யாவின் ஆளில்லா வானூர்தி நடத்திய தாக்குதலில் மூண்ட தீயை உக்ரேன் வீரர்கள் அணைத்தனர். - படம்: ஏஎஃப்பி

கார்கிவ்: ரஷ்யப் படைகள் உள்ளே நுழைந்துவிடாதவாறு எல்லை அருகே 24 மணிநேரமும் நிலைகொண்டு இருக்கும் உக்ரேனிய ராணுவ வீரர்களுக்கு பல மாத காத்திருப்புக்குப் பின்னர் பீரங்கிக் குண்டுகள் கிடைத்து உள்ளன.

பில்லியன் கணக்கான டாலர் மதிப்புடைய ராணுவ உதவி அமெரிக்காவில் தேக்கம் கண்டதன் விளைவாக எல்லை அருகே தற்காக்கும் வீரர்களிடையே ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டது. பல மாதங்களாக நீடித்த அந்தப் பற்றாக்குறை தற்போது நீங்கி உள்ளது.

$61 பில்லிய டாலர் மதிப்புடைய ராணுவ உதவித் தொகுப்புக்கு கடந்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது எல்லை ராணுவத்தினருக்கு ஆயுதம் கிடைத்து வருகிறது.

ரஷ்யாவின் தாக்குதல் இதற்கு முன்னர் பாக்முத் நகரைக் கைப்பற்றியபோது நடத்தப்பட்டதை விட மோசமாக இருக்கிறது என்று கார்கிவ் வட்டாரத்தின் வடக்கு மாவட்டக் குடியிருப்பாளர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்