தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிளிங்கன்: அனைத்துலக நீதிமன்றத்திற்கு எதிரான தடைக்கு பாடுபடுவேன்

1 mins read
94011c5e-faa2-49ac-906e-b3a7ef18c36a
அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகளின் மீது தடை விதிப்பதற்கு நாடாளுமன்றத்துடன் இணைந்து செயலாற்றப்போவதாக திரு ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். - படம்: ஊடகம்

வாஷிங்டன்: இஸ்ரேலில் கடந்த அக்டோர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 35,000ஐ நெருங்கிவிட்டது.

போர்க் குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட், ஹமாஸ் தலைவர்கள் ஆகியோருக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைமை வழக்கறிஞர் கரீம் கான் கைதாணை அனுப்பும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக அந்த நீதிமன்ற அதிகாரிகளுக்கு எதிராக பொருளியல் தடை உத்தரவு பிறப்பிக்க பைடன் நிர்வாகம், அமெரிக்க நாடாளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செனட் துணைக் குழு விசாரணையில் குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறுகையில், நீதிமன்ற அதிகாரிகளுக்கான அமெரிக்கத் தடை உத்தரவுகள் புதுப்பிக்கப்படுவதைக் காண விரும்புவதாக திரு பிளிங்டனிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பிளிங்கன்இஸ்‌ரேல்