ஜப்பானின் ஹனேதா விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்

ஜப்பானின் ஹனேதா விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்

1 mins read
d9cbeffd-4594-437d-bfad-b7bd1b6181f2
சம்பவம் நிகழ்ந்தபோது சம்பந்தப்பட்ட விமானம் ஒன்றில் பயணிகள், சிப்பந்திகள் என 328 பேர் இருந்தனர். - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானின் ஹனேதா விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதிக்கொண்டன.

இரு விமானங்களும் ஜப்பான் ஏர்லைன்சுக்குச் சொந்தமானவை.

அவற்றின் இறக்கைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதை அடுத்து, விமானச் சேவை ஒன்றை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் மே 23ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

அப்போது சம்பந்தப்பட்ட விமானம் ஒன்றில் பயணிகள், சிப்பந்திகள் என 328 பேர் இருந்தனர்.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
விமானம்விபத்து