ஆட்டங்கண்ட விமானத்தின் சிப்பந்திக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை

ஆட்டங்கண்ட விமானத்தின் சிப்பந்திக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை

படம்: ராய்ட்டர்ஸ்

23 May 2024 - 7:14 pm

1 mins read

பெட்டாலிங் ஜெயா: காற்றின் நிலை சரியில்லாததால் ஆட்டங்கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்சின் ‘எஸ்கியூ321’ விமானத்தில் பயணம் செய்த மலேசியாவைச் சேர்ந்த சிப்பந்திக்கு மற்றோர் அறுவை சிகிச்சை வியாழக்கிழமையன்று (மே 23) மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவருக்குச் செவ்வாய்க்கிழமையன்று ஓர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் மேலும் ஓர் அறுவை சிகிச்சையை வியாழக்கிழமை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தாய்லாந்திற்கான மலேசியத் தூதர் ஜோஜி சேமுவல் தெரிவித்தார்.

அந்த 32 வயதான சிப்பந்தி ஆபத்தான நிலையில் இருந்தாலும் அவருடைய நிலைமை சீராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அவருக்குத் தலை மற்றும் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் திரு ஜோஜியை தொடர்பு கொண்ட போது கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்விமானம்விபத்து