‘நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் புதையுண்டு கிடக்கக்கூடும்’

1 mins read
650db73c-06c1-4c14-9009-b661b0891476
தேடுதல், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: பாப்புவா நியூகினியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோரும் 1,100க்கும் அதிகமான வீடுகளும் புதையுண்டு கிடக்கக்கூடும் என்று அந்நாட்டு ஊடகம் மே 25ல் தெரிவித்தது.

தலைநகர் போர்ட் மொரேஸ்பியிலிருந்து 600 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் மே 24ஆம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் அவசரநிலைக் குழுக்கள் தேடுதல், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மே 24ஆம் தேதி காலை நிலவரப்படி நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவு காரணமாக கிராமத்துக்கு செல்ல பயன்படுத்தப்படும் சாலை புதையுண்ட நிலையில், அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் அங்கு விரைந்தனர்.

உயிர் பிழைத்தோரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அவற்றைக் காட்டும் காணொளி ஒன்றைக் கிராமவாசி ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார்.

பெண்கள் அழும் சத்தம் அதில் கேட்டதாகக் கூறப்படுகிறது.

மீட்பு, நிவாரணப் பணிகளில் தற்காப்புப் படையினருடன் பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் சேர்ந்து உதவி வருவதாக பாப்புவா நியூ கினி பிரதமர் ஜேம்ஸ் மராப்பே தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்